Friday, 3 February 2017

மனம் ஒரு குரங்கு!! #சிறுகதை

# ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது.

* அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான்.

*உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி.

* அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது.

* நடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான்.

*அந்த மனித குரங்கு, கவலை படாதே நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன்.

*என்னை அண்டி வந்த உனக்கு பாதுகாப்பு தருவேன் என்றது.

இரவு பொழுதும் வந்தது....

*புலியோ மரத்தின் கீழே பசியோடு இருந்தது.

* மனிதனும் மனிதகுரங்கும் மாறி மாறி உறங்க முடிவு செய்தனர்.

* மனிதன் தூங்கிய போது குரங்கு காவல் காத்தது குரங்கு தூங்கும் போது மனிதன் காவல் காத்தான்.

* புலி இவர்களை பிரித்தாலன்றி நமக்கு உணவு கிடைக்காது என எண்ணி மனிதனிடம்....வஞ்சகமாக ....
“இப்போது மனிதகுரங்கு தூங்குகிறது நீ அதை பிடித்து கீழே தள்ளிவிடு.....எனக்கு வேண்டியது பசிக்கு இரை, உன்னை விட்டு விடுகிறேன்” என்றது.

*மனித மனம் குரங்கை விட மோசமானது.

*நாம் தப்பிக்கலாம் என்று தன்னலம் கருதி மனிதன் குரங்கை கீழே தள்ளிவிட்டான்.

*கீழே விழும்போது நடந்ததை புரிந்த கொண்டது குரங்கு.

 ஆனால் புலியோ “எனக்கு மனித மாமிசம் தான் வேண்டும்....உனக்கு மனிதனின் இயல்பை புரிய வைக்கவே இவ்வாறு கூறினேன்.

*இப்போதும் உன்னை விட்டு விடுகிறேன்....நீ மேலே சென்று மனிதனை கீழே தள்ளிவிடு நான் பசியாற மனித மாமிசம் உண்டுவிட்டு போய்விடுகிறேன்” என்றது.

* அப்படியே செய்வதாக சொல்லிவிட்டு மரத்தின் மேலே ஏறி வந்த குரங்கு மனிதனின் அருகில் வந்தது.

* மனிதனோ பயத்தால் நடுங்கினான்.

*மனித குரங்கோ “பயப்படாதே மனிதா என்னை நம்பி அடைக்கலம் என்று வந்த உன்னை எப்போதும் காப்பேன்.

* புலியிடமிருந்து தப்பிக்கவே நான் உன்னை கீழே தள்ளுவதற்கு ஒப்புக்கொண்டேன்.

* நீ கவலை இல்லாமல் இருக்கலாம்....” என்றது.

🌻நண்பன் என்று வந்தவனிடம்
நட்பு பாராட்டவேண்டும்.

🌻நட்பு கற்பை போன்றது.

🌻ஒருமுறை நட்பின் புனிதத்தில் குறை கண்டோமே ஆயின் அந்த நட்பு அதன் மதிப்பை இழந்தே போகும்..!

# *நட்பு உயிரை விட மேலானது*

தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது!*-வைரமுத்து #கவிதை

*தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது!*
-வைரமுத்து

வாடிவாசல் திறந்துவிடும்
    வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
    கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
    கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
     தமிழினத்தைக் கூட்டி


பீசாவும் பெப்சியுமே
     இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
     கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
    சூளுரைத்த பாட்டு - கடல்
உள்வாங்கிப் போனதடா
    உங்கள்குரல் கேட்டு

ஒருகொம்பு ஆணென்றால்
    மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
    இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
    தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
     வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
    திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
     கால்களுக்கும் வணக்கம்

சதுராடிக் களம்கண்ட
     சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
     நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
    களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
     நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
    வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
    ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
     புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும்நீர்
    ஆராய வேண்டும்!!