Monday, 12 September 2016


*ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,

*தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......

*வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

*தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

*ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

*ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

*எது அந்த தவளையை கொன்றது...?

*பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்..

*ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......

*நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.

*ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

*மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

*உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.

*"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

 ❇விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு ❇


❇தோற்றால் புலம்பாதே . . .
போராடு ❇


❇கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு❇


❇தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு ❇

   
❇நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி❇

     
❇ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் ❇

           ❇
❇நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை ❇

         
❇கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு ❇

           
❇  உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு ❇

     
❇கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு ❇

         
❇மொத்தத்தில் நீ பலமாவாய் ❇

       
❇சித்தத்தில் நீ பக்குவமாவாய்❇



❇உன்னால் முடியும் .❇

❇உயர முடியும் . . .❇

           
❇உதவ முடியும் . . .❇

❇❇❇❇❇❇❇
⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜

❇❇❇❇❇❇❇

No comments:

Post a Comment